விசிக மீதான கொலை வழக்கில்,... ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்...! - சென்னை உயர்நீதிமன்றம்.

விசிக மீதான கொலை  வழக்கில்,... ஒரு மாதத்துக்குள் அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும்...! - சென்னை உயர்நீதிமன்றம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என வேளச்சேரி போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சந்திக்க கட்சி அலுவக்கத்திற்கு சென்ற தன்னை கட்சி அலுவலகத்தில் இருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாக, சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் போலீசில் கடந்த 2011ம் ஆண்டு மே  28ம் தேதி புகார் அளித்தார்.

அதில், தன்னையும், தனது மனைவி குழந்தைகளை தாக்கிய அவர்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை பறித்துச் சென்றதாகவும், இந்த தாக்குதலுக்கு திருமாவளவன் தான் காரணம் எனவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக  கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது. பின்னர் இந்த வழக்கு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

 இந்நிலையில், அரசியல் அழுத்தம் காரணமாக இந்த வழக்கில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், கடந்த 11 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வேதா அருண் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதையும்  படிக்க     } பல்கலைக்கழகத்தின் அலட்சியம்.. ! மாணவர்களின் மேல்படிப்பில் பாதிப்பு...! - மருத்துவர் இராமதாசு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், இந்த வழக்கில் புலன் விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொண்டது ஏன் என புரியவில்லை எனத் தெரிவித்து,  வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, வேளச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும்  படிக்க     } திமுக அரசு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றால்.... சாலையை மறைத்து போராடுவோம்: அண்ணாமலை!!