பொதுச்செயலாளர் பெயரில் சசிகலா பரபரப்பு கடிதம்

புலியின் குகையை பூனைகளுக்கு  பரிசளிக்கலாமா என்று ஓ,பன்னீர் செல்வம். எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகச்சாடி தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

பொதுச்செயலாளர் பெயரில்  சசிகலா பரபரப்பு கடிதம்

புலியின் குகையை பூனைகளுக்கு  பரிசளிக்கலாமா என்று ஓ,பன்னீர் செல்வம். எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகச்சாடி தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்  ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்திய சசிகலா`தனது பாரத்தை இறக்கி வைத்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து அதிமுக கொடி கட்டிய காரில் எம்.ஜி.ஆர் இல்லம் சென்ற அவர் கொடியேற்றும் நிகழ்வில்  கலந்து கொண்டார். அங்கிருந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.  அதிமுக கொடி கட்டிய காரிலேயே தொடர்ந்து பயணித்து வரும் அவர் தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இன்றைய தொடக்கம் ஓர் இனிய தொடக்கம் ஆகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர் பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நம் கழகத்தை இயக்குவோம் என்று கூறியுள்ளார்.

அண்ணா.எம்.ஜி.ஆர். ஜெயலலிதா  பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம்.. பகை வெல்வோம்.. ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார். அ.தி.மு.க நாடாண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோமே... சிந்தியுங்கள்! . இன்னல்களை அம்மா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி - காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி என்றும் aவர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார் 

பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாள் ஆகட்டும். தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது? தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகளால் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம் சாதிப்போம் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.