அடுத்த வைரஸ்கள் இங்கிருந்து தான் பரவும்,.. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! 

அடுத்த வைரஸ்கள் இங்கிருந்து தான் பரவும்,.. ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.! 

வௌவால்கள் மூலம் கொரோனா பரவுவதற்கு ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். 


வளர்ந்து வரும் மக்கள் தொகையால், வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, சூழலியல் மாற்றம் ஏற்பட்டதன் விளைவாக, மக்களின் தேவை அதிகரித்து, கால்நடைகளின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. இந்த சூழலியல் மாற்றம் தான் பல வித நோய்களை விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரப்புவதாகவும், SARS, கொரோனாவைரஸ் போன்ற நோய்கள் பரவுவதற்கு உரிய ஆதாரம் இல்லாவிட்டாலும், ஒரு வகையான ஹார்ஸ்ஷூ வௌவால்கள் தான் இதற்கு காரணம் எனவும் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.  


தற்போது சீனாவில் இறைச்சிக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா பரவ அந்த பகுதிகள் முக்கிய ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் என்றும், இதேபோல் ஷாங்காய், வடக்கு பிலிப்பைன்ஸ், ஜப்பானில் கால்நடை வளர்ப்பு அதிகரித்ததன் விளைவாக அந்த இடங்களும் கொரோனாவுக்கான ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.