தமிழக அரசை புகழ்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்.! 

தமிழக அரசை புகழ்ந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர்.! 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. அதற்க்கு முன் தனது தேர்தல் அறிக்கையிலே ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்பதை தனது தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. அதன் படி இரண்டு தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என ஆட்சியமைத்ததும் அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.


அரசின் இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகியது. கொரோனா காலத்தில் அரசின் இந்த அறிவிப்பானது ஏழை,எளிய மக்களின் வாழ்வுக்கு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த திட்டத்தை  நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜியும் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "இந்த கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பணத்தை அவர்களது கைகளிலேயே கொண்டு போய்ச் சேர்ப்பதே சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் முழு பொது முடக்கக் காலத்தில் நியாய விலைக் கடை களின் மூலம் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது" எனத் தெரிவித்துள்ளார். இவர் 2019ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் ஏற்பது குறிப்பிடத்தக்கது.