இந்து என்பதற்காக ஒருவர் இந்தியாவை ஆளக்கூடாது - திருமாவளவன்

இந்து என்பதற்காக ஒருவர் இந்தியாவை ஆளக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

'ஏ படம்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவானது சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த 'ஏ படம்' என்பது ஒரு உரையாடலை துவங்கி வைக்கிறது. அம்பேத்கரின் பெயர் அவர் ஆசிரியர் பெயர்  என்று திரித்து சொல்லப்பட்டிருக்கிறது.அப்படி ஒரு ஆசிரியர் என்று யாருமே இல்லை. அம்பாவதே என்பது மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய மாவட்டம். அப்படி அம்பாவதேக்கர் என்று அழைக்கும் போது அது நாளடைவில் அம்பேத்கர் என்று ஆகிவிட்டது என்று ஆதாரங்களுடன் ஒரு கருத்து உள்ளது.

அம்பேத்கர் மற்றும் காந்தி இடையே பல முரண்பாடுகள் இருப்பினும், மதசார்பின்மை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் ஒன்றிணைந்தார்கள். இந்த இடத்தில் தான் நாம் பிஜேபி யுடன் முரண்படுகிறோம். மதம் சார்ந்த அரசாக அறிவிக்க வேண்டும் என்றும், இந்துக்கள் அதிகம் இருப்பதால் இந்து அரசாக அறிவிக்க வேண்டும் என்பதே முரண்பாடான கருத்து.

மேலும், ஜனநாயக சக்தியே இந்தியாவை ஆள வேண்டும், தமிழன் அல்லது இந்து என்பதற்காகவோ இந்தியாவை ஆள விடக்கூடாது. ஒரு சாதி ரீதியான ஒருவர் ஆள முயன்றால் அது  தற்காலிகமான ஒன்றேயாகும் என்று தெரிவித்தார்.