ஒரே டிக்கெட்..! சென்னையில் வரப்போகும் மாற்றம் என்ன?

சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் பயணிக்கும் மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில், இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் நடைமுறை குறித்து இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.
மக்கள் பயன்பாடு:
சென்னை மாநகரில் பொதுமக்களின் வசதிக்காக மாநகர அரசு பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான மக்கள் இவற்றால் பயன்பெற்று வருகிறார்கள். அதிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்லலாம் என்பதால், பெரும்பாலான மக்களின் விருப்பம், மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலாக உள்ளது.
தனித் தனி கட்டணம்:
தற்போதைய நிலையில் மாநகர பஸ்கள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒருவர் பயணிக்க வேண்டும் என்றால் அவர்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இவை அனைத்துக்கும் ஒரே வகையான பயணச்சீட்டை பயன்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.
விவாதம்:
இந்த ஆலோசனையில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர ரயில் அனைத்திற்கும் ஒரே கட்டணம் குறித்து இவர்கள் தங்களின் முடிவுகள் விவாதிக்கவுள்ள்னர்
இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் சென்னையில் ஒரே பயணச்சீட்டு முறை நடைமுறைக்கு வரும். அதன்படி ஒருவர் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே பயணச்சீட்டு மூலம் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.