வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால்...விவசாயிகள் எடுத்த முடிவு!

வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால்...விவசாயிகள் எடுத்த முடிவு!

சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால் சேமிக்கும் முறையில் விவசாயிகள் சேமித்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். 

சேமிக்கும் முயற்சியில் விவசாயிகள்

 ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அதிக நிலப்பரப்பில் பயிரிடுகிறது வெங்காய நாற்றுகளை நடுவதன் மூலமும் பழைய வெங்காயத்தை விற்பதன் மூலமும் சின்ன வெங்காயம் நடவு செய்யப்படுகிறது.

தற்போது காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை மற்றும் ஒட்டன்சத்திரத்தை சுற்றி உள்ள பல கிராம பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்திற்கு போதிய விலை இருந்தபோது தோட்டத்தில் இருந்து பறித்த உடன் அப்படியே சந்தைக்கு அனுப்பி வைத்தனர்.

 மழை காரணமாக விலை உயர்வு

 ஆனால் தற்போது விற்கும் விலையானது கட்டுப்படியாகத நிலையில் சேமிக்கும் முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பெய்த மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக வெங்காயம் சரியான விளைச்சல் கொடுக்கவில்லை.

 நல்ல தரமான புதிய வெங்காயம் கிலோ ரூபாய் 35 வரை விற்பனை ஆகிறது வெங்காயம் பறிப்பதற்கு விவசாய கூலி தொழிலாளிகளுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 300 வரை செலவிட வேண்டியுள்ளது  உழவு செய்வதிலிருந்து அறுவடை செய்யும் வரை செலவு கணக்கை பார்த்தால் மிஞ்சுவது ஒன்றுமில்லை என்றும் தற்போது அறுவடை செய்து வரும் வெங்காயம் நாங்கள் சேமிப்பு பட்டறைக்கு எடுத்துச் செல்கிறோம் பட்டறையில் வைக்கப்பட்ட வெங்காயம் நல்ல விலை வரும் வரை காத்திருந்து மார்க்கெட்டுக்கு எடுத்து செல்வோம் என்றனர்.