வேடந்தாங்கல் பறவை போல் தாவியுள்ளார்..! அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்..! 

வேடந்தாங்கல் பறவை போல் தாவியுள்ளார்..! அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்..! 

அதிமுக அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு.


சிறப்பான வரவேற்பு:

அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்தது முதல், செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள அதிமுகவில் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் கூட்டுத் தலைமையை நிராகரித்துவிட்டு ஈபிஎஸ், அதிமுகவில் தனக்கு இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  விமானம் மூலம் கோவை சென்றார். கோவை சென்ற அவருக்கு விமான நிலையம் முதல் விழா நடைபெற்ற சின்னியம்பாளையம் வரையிலும் அதிமுக வினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

மேலும் படிக்க: ஈபிஎஸ்க்கு இருக்கும் இறுதி நம்பிக்கை..! சொந்த ஊர் கோவிலுக்கும் போயிட்டு வந்தாச்சு..! இன்று இறுதி தீர்ப்பு..!

திமுக எதிர்ப்பு:

எங்கு சென்றாலும் திமுகவை வலுவாக எதிர்க்கும் தலைவர் தான் என்பதை நிரூபித்துக்கொண்டு வரும் ஈபிஎஸ், நேற்றைய நிகழ்வின் போதும் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இன்றைய திமுக அரசு 44 கோடியில் 138 பணிகளூக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில் 18 சதவீதம் கமிஷன் கேட்பதால் யாரும் ஒப்பந்தம் எடுக்கவில்லை என்றும், 11 முறை டெண்டர் விட்ட நிலையிலும் எந்த ஒப்பந்ததாரரும் பணியை மேற்கொள்ள முன்வரவில்லை என்றும் கூறினார். 

உறவினருக்காக மாற்றம்:

ஸ்டாலின் உறவினர் எல் அன் டி அருகே ஏராளமான நிலத்தை வாங்கி குவித்துள்ளதால் தான் 50% வேலைகள் முடிந்து இருக்கும் நிலையில் கூட பேருந்து நிலையம் மாற்றப்பட உள்ளதாக கூறிய ஈபிஎஸ், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் அதிமுக சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

விசித்திரமாக நடக்கிறது:

இன்று விடியா அரசு எதற்கெடுத்தாலும் குழு அமைத்து வருகிறது.18 மாதத்தில் 38 குழுக்கள் அமைத்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. போதை பொருள் டன் கணக்கில் பிடித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் ரம்மியை அம்மா அரசு தடை செய்தது. ஆனால் நீதிமன்றத்தில்  சரியான தரவுகளை தராததால் அந்த நிறுவனம் வென்று விட்டது. உலகிலேயே விசித்திரமாக சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு நடத்தப்படுகிறது. அதற்கும் முதலமைச்சர் குழு போடுவார் என தெரிகிறது. ஒட்டுமொத்த குரல் ஒலிக்கிறது ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்று, நாங்கள் அரசை தட்டி எழுப்புகிறோம் ஆனால் அரசு கும்ப கர்ணன் போல் தூங்குகிறது. எதையும் செய்யாததால் தான் நாங்கள் குறை சொல்லி வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: கொடநாடு வழக்கில் விசாரணை...திமுகவில் இணைய முடிவு...அதிமுக நிர்வாகி கொடுத்த ஷாக்!

ஆறுகுடியை நம்பி அதிமுக இல்லை:

நேற்று கோவையில் நடந்த மாபெரும் இணைவு கூட்டத்தில், 50,000 மாற்றுக்கட்சியினர் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அதில் அதிமுகவை சேர்ந்தவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஆறுக்குட்டியும் திமுகவில் சேர்ந்தார். ஆறுக்குட்டி குறித்து பேசிய ஈபிஎஸ், யார் வேண்டுமானாலும் ஸ்டாலின் உடன் சேரலாம், இனி ஆறுக்குட்டி எப்போதும் என்னை சந்திக்க முடியாது, ஆறுக்குட்டியை நம்பி அதிமுக இல்லை. வேடந்தாங்கல் பறவை போல் தாவியுள்ளார் எனக் கூறியுள்ளார்.