110 விதியின் கீழ் முதலமைச்சர் கொண்டு வந்த அறிவிப்பை வரவேற்று பேசிய ஓபிஎஸ், எந்த இடத்திலும் அதிமுக பெயரை குறிப்பிடாமலே பேசி அமர்ந்தார்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்த நிலையில், ஒவ்வொரு கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் அவரவர் கட்சி சார்பில் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று பேசி அமர்ந்தனர்.
இதையும் படிக்க : வைக்கம் நூற்றாண்டு விழா ஓராண்டு நடைபெறும் - முதலமைச்சர் அறிவிப்பு!
அந்த வரிசையில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து முதலமைச்சர் எடுத்து கூறியுள்ளது சிறப்பானது என தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சரின் இந்த சிறப்பு அறிவிப்பு, வரலாற்றில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை பெரும் என்று தெரிவித்த ஓபிஎஸ், அதனை தேசிய விழாவாக அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது மற்றும் வரவேற்கதக்கது என பேசி அமர்ந்தார். இந்த உரையின் போது, எந்த இடத்திலும் அதிமுக என்ற பெயரை ஓ.பி.எஸ் பயன்படுத்தாதது குறிப்பிடத்தக்கது.