புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில், மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் மீன்களை விற்கமுடியாமல் திணறும் விசைப்படகு உரிமையாளர்கள் வியாபாரிகள்.
புரட்டாசி மாதம் பெருமாளை வணங்கும் பக்தர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விரதம் இருப்பார்கள். இந்த விரதம் இருக்கும் நடைமுறை நெடுங்காலமாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இப்படியான புரட்டாசி மாதம் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான இன்று சென்னை காசிமேட்டில் விற்பனைக்காக பெரும்பான்மையான விசைப்படகுகள் கரைக்கு திரும்பிய நிலையில் மீன்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டினாலும் பொதுமக்கள் மீன் வாங்கி செல்பவர்களும் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் விடுமுறை தினம் என்பதால் மீன்களின் விலையானது அதிகமாக விற்பனையாகும் என நினைத்திருந்த நிலையில் மீன்களை வாங்கிய பெரிய, சிறிய வியாபாரிகளும் கூட மலிவான விலையிலேயே மீன்களை வாங்கி சென்றனர்.
மலிவு விலையில் மீன்கள் விற்கபட்டாலும் புரட்டாசி மற்றும் விநாயகர் சதுர்த்தியானது வரவிருப்பதால் போதிய அளவு கூட்டம் இல்லாத நிலையில் எப்போதும் அசைவ பிரியர்களின் கட்டுபாட்டில் காணப்படும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் காற்றுவாங்கி கொண்டிருக்கிறது.
இதனால், விசைப்படகு உரிமையாளர்களும், வியாபாரிகளும் வாங்கி மீன்களை விற்கமுடியாமல் திணறிவருகின்றனர்.