சிகிச்சைக்கு கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோவிற்கு அபராதம்!! தஞ்சை போலீஸ் அடாவடி...

சிகிச்சைக்கு  கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோவிற்கு அபராதம்!! தஞ்சை போலீஸ் அடாவடி...

தஞ்சையில் மருத்துவ சிகிச்சைக்கு  கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோவிற்கு  இ-பாஸ் கேட்டு  காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கர்ப்பிணியான சத்யா மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில்  சமூக இடைவெளியுடன் இரண்டு பேர் மட்டும் தஞ்சைக்கு வந்துள்ளனர். அப்போது ஊரடங்கு உத்தரவால் தஞ்சை சிஆர்சி  பணிமனை முன்பு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இவர்கள் வந்த  ஆட்டோவை வழிமறித்து விளக்கம் கேட்ட காவல்துறையினரிடம்  மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை ஏற்காத காவல் அதிகாரி  ஆட்டோவிற்கு இ பாஸ் வேண்டும் என்ற காரணத்தை கூறி  ஆட்டோ டிரைவர் முகக் கவசம் அணியவில்லை என்று தெரிவித்து ஆட்டோ டிரைவருக்கு ரூ 200 அபராதம் விதித்துள்ளார்.

இது குறித்து அவர்கள் கூறும்போது மருத்துவ சிகிச்சைக்கு மாவட்டத்திற்குள் இ பாஸ் தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தாலும் காவல்துறையினர் அதனை பின்பற்றாமல் ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்ததால் அவர்களுக்கு கடும் மன உளைச்சள் ஏற்பட்டதாகவும் அபராதம் விதித்த காவல்துறை அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர்.