ஆ. ராசாவுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டம்!!!

இந்துக்களை இழிவு படுத்தி பேசிய ஆ.ராசாவை கண்டித்து பொள்ளாச்சியில் 200.க்கும் மேற்பட்ட இந்து முன்ணணியினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
ஆ. ராசாவுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டம்!!!
Published on
Updated on
2 min read

இந்து மதத்தையும் இந்துக்களை பற்றியும் இழிவாக பேசிய முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் பிஜேபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர்  கலந்துகொண்டு ஆ.ராசாவிற்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அண்ணாதுரை அளித்த பேட்டியின் போது, “இந்து என்று சொன்னால் விபச்சாரியின் மகன் என்று இந்துக்களை பற்றி மிகவும் கேவலமான வார்த்தையில் பேசியிருக்கிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது இந்துக்கள் இந்த நாட்டில் பெருவாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் திமுகவில் இருப்பவர்கள் 90% பேர் இந்துக்கள் என்று மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார்.” என ஆவேசமாக பேசினார்.

மேலும் பேசிய அவர், “அப்படி இருக்கக்கூடிய 90% பேர் விபச்சாரிகளின் மகனா? என்பதை ஆ ராசா தான் விளக்கம் அளிக்க வேண்டும். இதை யாரும் கண்டிக்காத நிலை தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது கண்டித்தால் தங்களுக்கு  பாதிப்பு வருமோ? என்று அரசாங்கமே வாய் மூடி மௌனமாக இருக்கிறது. ஆ. ராசா இந்து என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நீலகிரி பாராளுமன்ற (தனி) தொகுதி உறுப்பினராக போட்டியிட்டுள்ளார் நீலகிரி தொகுதி இந்து தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வேட்புமனு தாக்கல் செய்தபோது தான்  இந்து என சொல்லித்தான் தாக்கல் செய்துள்ளார். அப்படிப்பட்ட ராசா தான் இந்து அல்லாதவன் என்று அறிவித்து கொள்ளலாம் அதற்கு யாரும் தடை சொல்லவில்லை. இந்துக்களை விமர்சனம் செய்வதை வண்மையாக கண்டிக்கத்தக்கது” என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com