பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டம்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்பாட்டம்...

பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால்  அத்தியாவசிய பெருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம், உதகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதே போல் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து கட்சி நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பினர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.