பா.ஜ.க கூட்டணி அரசுக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் பிரச்சாரம்!

பா.ஜ.க கூட்டணி அரசுக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் பிரச்சாரம்!

புதுச்சேரியில் விலைவாசி உயர்வு, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸார் பரப்புரையை மேற்கொண்டனர்.

விலைவாசி உயர்வு

இந்திய ஒன்றிய அரசானது தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாகவும், நீட் தேர்வை  கொண்டு வந்து ஏழை எளிய கிராம புற மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்தினர்.

 விவசாயிகளுக்கு எதிராகவும செயல்படுவதாகவும், இதேபோல் புதுச்சேரியை ஆளுகின்ற பா.ஜ. க-என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு,  பஞ்சாலைகளை திறப்பது, உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் ஒன்றை கூட இது வரை நிறைவேற்றவில்லை

அனைத்துத் துறைகளிலும் ஊழல்

ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் எல்லா துறைகளிலும் ஊழல் மயமாகிவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாநில தலைவர் சுப்ரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் இந்திய ஒன்றிய மற்றும் புதுச்சேரி அரசுகளை கண்டித்து கையில் பதாகைகள் ஏந்தியவாறு புதுச்சேரி - கடலூர் சாலையில் இருந்து புறப்பட்டு முக்கிய விதிகளின் வழியாக துண்டறிக்கைகளை பொது  மக்களுக்கு விநியோகித்து, பரப்புரையில் ஈடுப்பட்டனர்.