இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் கனமழை பாதிப்பால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு தமிழக அரசு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் அறிவித்திருப்பது போதுமானது அல்ல என குறிப்பிட்ட அவர், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் தஞ்சையில் குத்தகை விவசாயி ஒருவர் அதிர்ச்சியில் உயிரிழந்ததை சுட்டிக் காட்டி பேசிய முத்தரசன், இதுபோன்ற உயிரிழப்புகளை மூடிமறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்து உரிய அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.