எல்இடி பல்பு வாங்கியதில் ரூ.1.25 கோடி ஊழல்: 11 பேர் மீது வழக்கு..!

கடந்த அதிமுக ஆட்சியில், தேனி மாவட்ட பேரூராட்சிகளில் பயன்படுத்த எல்.இ.டி., பல்பு வாங்கியதில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எல்இடி பல்பு வாங்கியதில் ரூ.1.25 கோடி ஊழல்: 11 பேர் மீது வழக்கு..!

தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளது. இதில் ஆண்டிபட்டி, பூதிப்புரம், வீரபாண்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட 11 பேரூராட்சிகளில் கடந்த 2019 - 20 ஆம் ஆண்டுகளில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்ட 11 பேரூராட்சி செயல் அலுவலர்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும்  KMTL எலக்ட்ரிக்கல் உரிமையாளர் ரவி மற்றும் அவருடைய மனைவி ஜமுனா ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.