ஒன்றிய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போரட்டம்!

ஒன்றிய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போரட்டம்!

தேவகோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி தலைமையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து பஸ் மறியல் ஈடுபட்டனர்

 பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் சோதனை

இந்தியா முழுவதும் இன்று அதிகாலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை மூலம் கட்சியின் தலைவர் ஓ. எம்.ஏ.சலாம், ராமநாதபுரம் எஸ்டிபிஐ மேற்கு மாவட்ட தலைவர் பரக்கத்துல்லா மாநில பேச்சாளர் இத்ரீஸ் மற்றும் பல தலைவர்களை கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

இதனைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா தலைமையில் அனைத்து ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் பஸ் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்

சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.