ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!

பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் சுமார் 300 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால் நாட்டு படகுகள் கரைதட்டி காணப்படுகிறது மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒடிசாவில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பாம்பன் துறைமுகத்தில் முதலாம் என் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டது.மீண்டும் இயல்பு நிலைக்கு திறமையின் நிலையில் இன்று பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் திடீரென முன்னுறு மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் தரைதட்டி காணப்பட்டது.

மேலும் கடலில் இருக்கக்கூடிய சிறிய அளவிலான பாறைகள் கடல் சிற்பி கடல் பாசிகள் அனைத்தும் கடல் உள்வாங்கிய காரணத்தால் வெளியில் காணப்படுகிறது. பாம்பன் வடக்கு கடலில் சுமார் 300 மீட்டருக்கு கடல் உள்வாங்கிய காரணத்தால் படகுகள் மீட்க முடியாமல் மீனவர்கள் தவித்து வரும் சூழ்நிலையில்  மீண்டும் இயல்பு நிலைக்கு கடல் திரும்பும்போதே படகுகளை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.