முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி செல்கிறார்

முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி செல்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து மு டிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். மேலும், அரசு சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கும் அ டிக்கல் நாட் டி வருகிறார். அந்தவகையில் வருகிற 8-ந் தேதி(திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி வருகிறார். 

அப்போது திருநெல்வேலியில் ரூபாய் 5 கோ டியில் பொருநை அருங்காட்சியகம் அமைப்பதற்காக பணிகளை அவர் தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பாளையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள மேடை போலீஸ் நிலையத்தையும் திறந்து வைப்பார் என கூறப்படுகிறது.

இதுதவிர ஸ்மார்ட் சிட் டி திட்டத்தின் மூலம் மு டிவுற்ற பணிகள், நெல்லை மாவட்டத்தில் நிறைவடைந்த பல்வேறு பணிகளையும் முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். 

இந்நிலையில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவுக்கான இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், துணை கமிஷனர்கள் சீனிவாசன், அனிதா, ஆர். டி.ஓ.சந்திர சேகர் மற்றும் அதிகாரிகள் நேற்று பாளை பெல் மைதானம், மருத்துவ கல்லூரி மைதானம் உள்ளிட்ட சில இடங்களில் ஆய்வு செய்தனர். 

இதில் மருத்துவ கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இன்னும் ஓரிரு நாளில் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. முதல்-அமைச்சராக பதவிேயற்ற பின்னர் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக வருவதால் தி.மு.க.வினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். நெல்லை வரும் முதல்-அமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.