ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக தரையில் பாலை கொட்டி போராட்டம்...

கோவில்பட்டியில் ஆவின் நிர்வாகம் பாலை வாங்க மறுப்பதை கண்டித்து பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக தரையில் பாலை கொட்டி போராட்டம்...

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆவின் நிர்வாகம் பால் வாங்க மறுப்பதை கண்டித்து தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர் பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் நிர்வாகம் பால் கொள் முதல் செய்து வந்த நிலையில் தற்பொழுது பால் கூட்டுறவு சங்கம் மூலம் மட்டுமே பால் கொள்முதல் செய்யபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் பாலை கோவில்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு சென்று கொடுத்து வந்தனர்.ஆவின் பால் நிர்வாகத்தினர் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து அதன் தரத்தை பரிசோதனை செய்து அதற்கேற்ப அவர்களுக்கு விலையை கொடுத்து வந்தனர். ஆவின் கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களை தவிர சுமார் 40 க்கும் மேற்பட்ட தனிநபர் பால் உற்பத்தியாளர்கள் தாங்களே தனியாக வந்து ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பால் வினியோகம் செய்து வந்தனர்.இந்நிலையில் ஆவின் நிர்வாகம் சார்பில் தனி நபரிடம் இருந்து பாலை இனிமேல் கொள்முதல் செய்ய மாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.இதை கண்டித்து கோவில்பட்டி பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வருவதாகவும், தற்போது திடீரென வாங்க மறுப்பது தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும், பால் சொசைட்டி மூலமாக பாலை ஊற்றுங்கள் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஆகவே தங்களுக்கு வழக்கம் போல பால் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் தினந்தோறும் பாலைக் கொட்டி போராட்டம் நடத்துவோம் என்று பால் உற்பத்தியாளர் மொட்டைய சாமி என்பவர் தெரிவித்துள்ளார்