தமிழ்நாடு
தமிழக அரசின் அதிரடி உத்தரவு...45 பேருக்கு பணியிட மாற்றம்...அப்போ 9 பேருக்கு என்ன?
தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:
தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று, 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள்...!
தமிழக அரசு உத்தரவு:
அதன்படி, அரவிந்தன், விக்ரமன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ் குமார், கல்பனா நாயகர், வன்னிய பெருமாள், பிரவீன் குமார், அபிநபு, பகலவன், ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கியும், அதிவீரபாண்டியன், ஷியாமளா தேவி, ராஜேந்திரன் மோகன்ராஜ் உள்ளிட்ட 45 பேருக்கு பணியிட மாற்றமும் வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.