டாஸ்மாக் திறந்தால் மட்டும் போதாது,.. பார்களையும் திறக்க வேண்டும்.! அரசுக்கு புதிய கோரிக்கை.! 

டாஸ்மாக் திறந்தால் மட்டும் போதாது,.. பார்களையும் திறக்க வேண்டும்.! அரசுக்கு புதிய கோரிக்கை.! 

கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் பார்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் சென்னை வடபழனியில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளனர். அதே போன்று டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

மேலும் "கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 12 மாதங்கள் பார்கள் செயல்படாமல் இருந்த காரணத்தால் 1600 கோடி ரூபாய் பார் உரிமையாளர்கள் கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய சூழல் உள்ளது எனவே தமிழக அரசு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதியளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதேபோன்று "டாஸ்மாக் பார்கள் டெண்டர் 2 வருடங்களுக்கு மட்டுமே அரசு சார்பாக வழங்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் பார்கள் செயல்படாமல் உள்ளதால் அதனை நீட்டித்து தரவேண்டும்" என்று தெரிவித்த அவர் "உரிமை தொகையை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.