கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி...மெக்கானிக் ஷாப்பிற்குள் நுழைந்து கவிழ்ந்தது...!

கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி...மெக்கானிக் ஷாப்பிற்குள் நுழைந்து கவிழ்ந்தது...!
Published on
Updated on
1 min read

விருதுநகரில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த மாதையன் என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில்  30 டன் எடை கொண்ட நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு கர்நாடகாவில் இருந்து தளவாய்புரத்திற்கு சென்று கொண்டிருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்திராநகர் பகுதியில் வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 
சாலை ஓரத்தில் இருந்த மின்சார கம்பத்தின் மீது மோதி அருகில் இருந்த மெக்கானிக் ஷாப்பிற்குள் புகுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனம், மின்சார கம்பங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com