எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்கு... உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை...

டெண்டர் முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது, உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்கு... உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை...
Published on
Updated on
1 min read

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணைக்குழுவை நியமித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, சீலிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை முடித்து வைக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வழக்கின் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த நவம்பர் 8-ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்ய கோரி, உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com