பிளான் பெருசா இருக்கே..! கோவையைத் தொடர்ந்து, திருப்பூர் மற்றும் ஈரோடுக்கு பயணம் செய்யும் முதலமைச்சர்..! 

பிளான் பெருசா இருக்கே..! கோவையைத் தொடர்ந்து, திருப்பூர் மற்றும் ஈரோடுக்கு பயணம் செய்யும் முதலமைச்சர்..! 

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். 

மாபெரும் இணைவு:

கோவை மாவட்டம், பொள்ளாட்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன்  உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 55 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

கைதட்டல்:

விழாவில் பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்து கைத்தட்டல் பெறவிரும்பவில்லை என்றும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாக பாராட்டுகளை பெறவே தான் விரும்புவதாகவும் கூறினார். மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும்படியும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: கொடநாடு வழக்கில் விசாரணை...திமுகவில் இணைய முடிவு...அதிமுக நிர்வாகி கொடுத்த ஷாக்!

இன்றைய நிகழ்வு:

கோவை நிகழ்ச்சிகளை நேற்று நிறைவு செய்த முதலமைச்சர், திருப்பூரில் இன்று காலை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள்:

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். 

மேலும் குறிச்சி தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி, சொலவம்பாளையம் தனியார் தொழிற்பேட்டை உள்ளிட்டவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். 

மேலும் படிக்க: மீண்டும் மற்றொரு உயர்வா..?மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அரசு...ஓபிஎஸ் கடும் கண்டனம்!

கருணாநிதி சிலை:

இதைத் தொடர்ந்து ஈரோடு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கள்ளிப்பட்டியில் மாலை 5 மணிக்கு 8 அடி உயர கருணாநிதி திருவுருவச் சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். 

பின்னர், நாளை காலை பெருந்துறையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், 70 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, கிரே நகரில் அத்திகடவு அவினாசி திட்ட பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.