இந்த சமுதாயத்தினருக்கு வீடு கிடையாது...பகிரங்கமாக பேசும் பெண்மணி...வைரலாகும் வீடியோ!

இந்த சமுதாயத்தினருக்கு வீடு கிடையாது...பகிரங்கமாக பேசும் பெண்மணி...வைரலாகும் வீடியோ!
Published on
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம், பகுதியில்  "தாழ்த்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதில்லை" என பகிரங்கமாக பேசும் பெண்மணியின் வைரல் வீடியோ வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி ஒரு வணிகம் நிறைந்த பகுதியாகும். அங்கு தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தை, தயிர் மார்கெட், மாட்டுச்சந்தை, ஆட்டுச்சந்தை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான சமுதாய மக்கள் வந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் பேருந்து போக்கு வரத்து அதிகளவில் காணப்படுவதால் அவர்களுக்கு கால தாமதம் ஏற்பட்டு பணிகள் தடைபடுவதால் அந்த பகுதியிலேயே உள்ள வாடகை வீடுகளில் குடியேறலாம் என பல்வேறு சமுதாயத்தினரும் எண்ணியுள்ளனர். 

வீடு தர மறுக்கும் உரிமையாளர்கள்:

அதன்படி, பல்வேறு சமுதாயத்தினரும் வாடகைக்கு வீடு கேட்டு சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக கிருஸ்தவ, இஸ்லாமியர் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு கேட்டு சென்றால், வீட்டின் உரிமையாளர்கள் ஜாதி  கேட்டு தாழ்த்தப்பட்ட, கிருஸ்த்துவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுத்துள்ளனர். 

வைரலாகும் வீடியோ:

இந்நிலையில், ஒரு வீட்டின் உரிமையாளரான பெண்மணி ஒருவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கெல்லாம் வீடு தரமாட்டோம் என பேசும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,  தங்கள் வீடுகளை வாடகைக்கு கொடுத்தால் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் கெட்டுப் போவார்கள் என பகிரங்கரமாக வீடு தர மறுக்கும் பெண் ஒருவர் பேசும்  வீடியோ தற்பொழுது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com