அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்ட பெயர்..மீண்டும் தொல்காப்பிய பூங்கா என்று மாற்றம்.! 

அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்ட பெயர்..மீண்டும் தொல்காப்பிய பூங்கா என்று மாற்றம்.! 

அடையாறில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு  தொல்காப்பிய பூங்கா என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2007ஆம் ஆண்டு அடையாறு உப்பங்கழியில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 100 கோடியில் தொல்காப்பிய பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார். பின்னர் 2011 ஆம் ஆண்டில் அதனை திறந்து வைத்தார். பின்னர் வந்த அதிமுக அரசு பூங்காவை அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா என அழைத்து வந்தது. அங்கு தொல்காப்பியப் பூங்கா என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப் பட்டு இருந்தது. தற்போது புதிதாக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு அன்மையில் இப்பூங்காவை பார்வையிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் இப்பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்த அவர், அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதோடு இப்பூங்காவுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி வைத்திருந்த பெயரை பெயரிடுமாறு சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து பூங்காவுக்கு மீண்டும் தொல்காப்பியப் பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது அந்தப் பெயரில் பெயர் பலகையும் பூங்காவின் நுழைவாயில் வைக்கப்பட்டுள்ளது.