கோவையில் பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களுக்கு சீல்!

பாப்புலர் ப்ரண்ட் மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது.

கோவையில் பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களுக்கு சீல்!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்ததாக கூறி இந்திய அரசு அந்த அமைப்பை தடை செய்தது.

என்.ஐ.ஏ. சோதனை

மேலும் தீவிரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்ததாக பல்வேறு புகார்கள் அந்த அமைப்பின் மீது முன்வைக்கப்பட்டது.இது, தொடர்பாக கடந்த மாதம்  தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பலர் கைது செய்யப்பட்டு, பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தடை விதித்த இந்திய அரசு

பாப்புலர் ப்ரண்ட் மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து உத்தரவை பிறப்பித்தது. மத்திய  அரசின்  உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.

பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களுக்கு சீல்

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் ப்ரண்ட் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கும் இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.