மசோதா நிறைவேற்றப்பட்டது.... மீறினால் சிறை ஐந்து லட்சம் அபராதம்..

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு  சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு எடுத்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மசோதா  நிறைவேற்றப்பட்டது.... மீறினால் சிறை ஐந்து லட்சம் அபராதம்..

அறிக்கையை சமர்ப்பித்த நீதியரசர் சந்துரு

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அரசு குழு அமைத்தது. சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் 27-ம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு  சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு எடுத்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: விதியின் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்  என்னென்ன...?

சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையும் அபராதமும்

ரம்மி மற்றும் போக்கர் ஆகிய இரு சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டையும் தண்டனையாக விதிக்கவும்; சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டையுமே தண்டனையாக விதிக்கவும்; சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டையுமே தண்டனையாக விதிக்கவும், இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள்/ நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கவும், ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாத வகையிலும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது குறிப்பிடத்தக்கது.