சென்னையில் நவம்பர் 9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டது. அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பர் 12,13 மற்றும் 26, 27 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் 6033 பேர் நேரடியாக வந்து விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். அதில் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை 4374 பேர் வழங்கியுள்ளனர். பெயர் திருத்துதல், புகைப்படத்தை மாற்றுதல், முகவரியை மாற்றுதல், போன்ற திருத்த பணிகளுக்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் மனுக்களை வழங்கியுள்ளனர்.
வாக்காளர் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க : தொடர் கனமழையின் விளைவு...! 8 விமான சேவைகள் ரத்து...!