பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து போராடுவோம்,.! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு.! 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து போராடுவோம்,.! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு.! 

Published on

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து மூன்று நாட்கள் போராட்டங்கள் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் எதிரே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகுத்தார்..

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஜி.ராமகிருஷ்ணன் ,"தமிழகத்தில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து இருக்கும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று பாஜக அரசை கண்டிக்கும் வகையில் போராட்டமானது நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்" என்று கூறினார்.

மேலும் "வரியை குறைத்து 2014ம் ஆண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டி வலியுறுத்தினோம். ஆனால், கொரோனா காலகட்டத்தால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் விலை ஏற்றத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்" என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com