வீர லட்சுமிக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபர் கைது!

தமிழர் முன்னேற்றப் படை நிறுவன தலைவி வீர லட்சுமிக்கு, ஆபாச படங்களை அனுப்பிய நபர் போலீசார் பிடியில் சிக்கினார்.

வீர லட்சுமிக்கு ஆபாச படங்களை அனுப்பிய நபர் கைது!

தமிழர் முன்னேற்றப் படை நிறுவன தலைவி வீர லட்சுமிக்கு, ஆபாச படங்களை அனுப்பிய நபர் போலீசார் பிடியில் சிக்கினார்.

தமிழர் முன்னேற்றப் படை நிறுவன தலைவி வீர லட்சுமிக்கு, மர்ம நபர்கள் சிலர் சமூக வலைதளங்களின் மூலமாக தொடர்ந்து ஆபாச புகைப்படங்கள் வீடியோக்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து வீர லட்சுமி அளித்த  ஆதாரங்களை கொண்டு, கேரளாவுக்கு விரைந்த பல்லாவரம் சங்கர் நகர் போலீசார், அங்கு பதுங்கி இருந்த அரியலூர் மாவட்டம் கரின்மேடு உடையார் பாளையத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் வீரலட்சுமி க்கு ஆபாச படங்கள் அனுப்பிய நபர்கள் குறித்தும், மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.