திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்டம் : அமைச்சர் சேகர் பாபு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்  என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில்  பெருந்திட்டம் : அமைச்சர் சேகர் பாபு

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயிலில் 300 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். திருக்கோயிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் இராஜகோபுரம் தெரியும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது என்றும் இன்னும் இரண்டு நாட்களில்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.