இனி கோவில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படும்... புதிய திட்டம் வெள்ளிக்கிழமை முதல் அமல்!!

தமிழக திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கான அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

தமிழக திருக்கோயில்கள் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற நடைமுறை இருந்தாலும், அவை முறையாக நடைபெறுவதில்லை எனப் புகார் நிலவி வந்தது. இதனையடுத்து கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்காக, அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 47 கோயில்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சேகர்பாபு அறிவித்துள்ளார். கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்றும், அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.