பிபிசியின் ஆவண படம் தடை...! நீதிபதி சந்துரு விமர்சனம்...!!  

பிபிசியின் ஆவண படம் தடை...! நீதிபதி சந்துரு விமர்சனம்...!!  

கடந்த காலத்தில் மோடி கைதிற்கு பிபிசி செய்தி வெளியிட்டது ஆனால் மோடி அரசு பிபிசியின் ஆவண படத்தை  தடை செய்கிறது என நீதியரசர் கூறியுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஊடகவியலாளர்கள் தங்களின் துறை சார்ந்த தகுதியும் மேம்படுத்திக் கொள்வதற்கும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் பங்கேற்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோரும் திமுகவின் செயல் தொடர்பாளர் டி கே சி இளங்கோவன் மற்றும் ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு ஆகியோர் பங்கேற்று செய்தியாளர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் சாமிநாதன், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கான பல்வேறு நல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் ஜனநாயகத்தின் 4 தூண்களில் 1 தூணாக இருக்கின்ற ஊடகவியலாளர்கள், உண்மையான செய்தியை மக்கள் இடம் கொண்டு செல்ல பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்  தொழில்நுட்பத்தில் வளர்ந்து உள்ள இந்த நிலையில் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை சட்டரீதியாக ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் கூறினார்.

மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழநாடு அரசு செய்த நன்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி, தவறு இருந்தாலும் சுட்டி காட்டுங்கள் நாங்கள் திருத்திக் கொள்வோம் என்று முதலமைச்சர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய நீதியரசர் சந்துரு, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அப்போது அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் அறிவிப்பு கொடுத்திருந்தார். பத்திரிகைகளை வெளியிடும் முன்னர்  தனிக்கை செய்யும் நடைமுறை அப்போது 2 ஆண்டுகள் அமலில் இருந்தது என தெரிவித்தார்.

மேலும், பிபிசி நிறுவனம் கடந்த காலங்களில் மோடி கைது செய்யப்பட்டபோது, பிபிசி வானொலி மூலமாக மக்களுக்கு செய்தி சென்றது. ஆனால் இன்று மோடியை பற்றி ஆவணப்படம் எடுத்ததற்கு பிபிசி நிறுவனத்தின் ஆவண படத்தை மத்திய அரசு தடை செய்கிறது எனக் கூறினார்.

தொடர்ந்து, குடிமகன்களுக்கு இருக்கின்ற கருத்து சுதந்திரம் தான் ஊடகங்களுக்கும் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், செய்தியாளர்கள் சட்ட வரையறைக்குள் இருந்து  செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.