வரப்போகுது 5ஜி சேவை..! எப்போது அறிமுகம்..? 

வரப்போகுது 5ஜி சேவை..! எப்போது அறிமுகம்..? 

நாட்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் தேதி குறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

5 ஜி ஏலம்:
 
4ஜி அலைக்கற்றையைவிட 10 மடங்கு வேகத்தில் செயல்படும் 5ஜி அலைக்கற்றை ஏலம், கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி 7 நாட்களாக நடைபெற்றது. இதில், ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. 40 சுற்றுகளாக நடந்த ஏலத்தின் முடிவில், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போனது. 

மேலும் படிக்க: பாஜக மீது படியும் புதிய ஊழல் புகார்..?

5 ஜி ஊழல்:

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. ஏனெனில் முன்னர் அரசாங்கம் 5ஜி அலைக்கற்றையின் அடிப்படை விலையை ரூ.4.3 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் ஏலம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே விடப்பட்டுள்ளது. 7 நாட்கள் நீடித்த 5ஜி ஏலம் இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் என பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

டிரெண்டிங்:

இந்த ஏலத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் #5G_Scam_Bjp என்ற ஹேஷ்டேக்குடன் மோடி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கப்பட்டது.  என்எஸ்இ ஊழல் - 5 லட்சம் கோடிகள், பிட்காயின் ஊழல், பிஎம் கிசான் இன்சூரன்ஸ் - 40000 கோடிகள், இப்போது 2.8 லட்சம் கோடிகள் மதிப்பிலான 5 ஜி ஊழல் என பல ஊழல் பட்டியல்களை சமூக வலைதளைங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: அடுத்து புதுச்சேரி..! பாஜகவுடன் விரிசலில் என்.ஆர்.காங்கிரஸ்..! சட்டசபையில் நடந்தது என்ன?

5 ஜி அறிமுகம்:

இந்நிலையில், 5ஜி சேவை தொடர்பாக பேசியுள்ள மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், வரும் 12ம் தேதிக்குள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த தீவிர  காட்டி வருவதாகத் தெரிவித்தார். 

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 5ஜி சேவை சென்றடைய வேண்டும் என்பதே தங்கள் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.