ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் நோட்டீஸ்..!

ஒரே நாளில் இருவேறு இடங்களில் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு.!

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் நோட்டீஸ்..!

பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான விமான போக்குவரத்து சேவையை வழங்கத்தவறியது ஏன்?  என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நேற்று டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் பறந்து சென்ற போது எரிபொருள் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதே போல் நேற்று குஜராத்தின் கந்தலா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அண்மைக்காலமாக இந்நிறுவனத்தின் விமானங்கள் இது போன்ற தொழில்நுட்ப சர்ச்சைகளில் சிக்கி வருவதால் இது குறித்து விளக்கம அளிக்குமாறு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.