இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ : பிஎஸ்எல்வி-சி 53 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது!! 

இந்திய ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ பிஎஸ்எல்வி-சி 53 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஜூன் 30 ஆம் தேதி மாலை 6 மணியளவில் விண்ணில் ஏவப்படுவதாக அறிவித்து இருந்தது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ : பிஎஸ்எல்வி-சி 53 செயற்கைக்கோளை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது!! 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வியாழக்கிழமை தனது பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்துடன் மூன்று செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதாக தெரிவித்தது. இதனுடன் நியூஸ்பேஸ் லிமிடெட் உடன் இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிங்கப்பூரின் மூன்று செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 

இதுவே நியூஸ்பேஸின் இந்திய வணிக பயணத்தின் இரண்டாவது பணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்எல்வி சி-53 விண்கலமானது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சதீஷ் தவான் விண்வெளியின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது. 

இதன் இடையில் நேற்று மாலை 5 மணியளவில் இருந்து இதற்கான கவுண்டன்கள் தொடங்கப்பட்டது, இதன்பின் ஏவுதலின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வந்தது.  இந்த இரண்டாவது தளத்தில் இருந்து ஏவப்படும் 16 வது விண்கலமாக பிஎஸ்எல்வி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரலையாக காண்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதனை இணையத்தளத்தில் மூலமும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. 

இந்த விண்கலம் சுமந்து செல்லும் மூன்று செயற்கைக்கோள்களின் DS-EO, NeuSARஆகியவையும் அடங்கும் என்றனர், நியூசார் என்பது சிங்கப்பூரின் முதல் SAR PAYLOAD ஐ சுமந்து செல்லும் சிறிய ரக செயற்கைக்கோளாகும். மேலும் இவை இரவும் பகலும் எந்நேரத்திலும் புகைப்படம் எடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விண்கலம் 228. 433 டன் ஆக இருப்பதாகவும், தோராயமாக 44.4 மீட்டர் நீளம் கொண்டதாகவும் தகவல் வெளியானது. இந்த செயற்கைக்கோளானது பூமத்திய ரேகைக்கு மேலே 570 கி.மீ உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தது. 

இஸ்ரோ 2022 பிப்ரவரி முதல் PSLV-C52 திட்டத்தின் அடிப்படையில் இதுவரை மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் ரேடார் இமேஜிங் வேலையை செய்யக்கூடிய செயற்கைக்கோள். இவை விவசாயம், வனம், வானிலை போன்ற சூழல்களை தெளிவாக படம்பிடித்து காட்டவும் அதனை எடுத்து அனுப்பக்கூடிய திறனும் வாய்ந்தவையாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

மேலும் தற்போது இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி சி-53 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதையடுத்து ஏவப்பட்ட விண்கலம் மூலம் வரும் தகவல்கள் மக்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.