ஒரு மணி நேரம் செயலிழந்த இன்ஸ்டாகிராம்... #InstagramDown ஹேஷ்டேக்கை பறக்க விட்ட இளைஞர்கள்..!

அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் இன்ஸ்டாகிராம் செயலிழப்பு..!

ஒரு மணி நேரம் செயலிழந்த இன்ஸ்டாகிராம்... #InstagramDown ஹேஷ்டேக்கை பறக்க விட்ட இளைஞர்கள்..!

இன்ஸ்டாகிராம்:

உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு முக்கிய சமூக வலைதளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். டிக் டாக் செயலி இந்தியாவில் முடங்கிய பிறகு அதற்கு மாற்றாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தான் இளைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது எனலாம். 

ஃபாலோயர்கள் கூடினால் நீங்களும் செலிபிரிட்டி:

இந்த இஸ்டாகிராமில் நாம், நமது புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தால் அதனைக் கூட இதன் மூலம் உலகறியச் செய்ய முடியும். இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை கொண்டிருந்தால் நீங்களும் ஒரு செலிபிரிட்டி தான். 

ஒரு மணி நேரம் செயலிழப்பு:

அந்த அளவிற்கு இளைஞர்களிடம் ஃபேமஸ் ஆகியிருக்கும் இந்த இன்ஸ்டாகிராம் நேற்று சுமார் 1 மணி நேரம் செயலிழந்து உள்ளது. அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளது. 

#InstagramDown:

இதனால் ஆத்திரமடைந்த பயனாளர்கள் ட்விட்டரில்  #InstagramDown என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்துவிட்டனர். அத்தோடு தங்களது ஆதகங்களை கொட்டித் தீர்க்கவும் ஆரம்பித்து விட்டனர். பெரும்பாலும் இரவு உறங்குவதற்கு முன்பாகத் தான் அனைவரும் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவர். சரியாக அந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் மிகுந்த அப்செட் ஆகி விட்டனர்.