ரஷ்ய வீராங்கனையை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்..!

3 அமெரிக்க வீரர்களுடன் ரஷ்ய வீராங்கனையும் விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைப்பு..!

ரஷ்ய வீராங்கனையை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்..!

ரஷ்ய வீராங்கனை:

முதன்முறையாக ரஷ்யா வீராங்கனையை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்று சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி வீரர்கள் 3 பேர் மற்றும் ரஷ்யா வீராங்கனை அன்னா கிகினா ஆகிய 4 பேரை விண்வெளி மையத்துக்கு அனுப்பும் திட்டத்தை நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தி வருகிறது. 

க்ரூ-4:

அண்மையில் இயான் புயலால், க்ரூ-5 திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இன்று க்ரூ-4 திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது.