மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம்..! சி.எம்.ஆர்.எல் நிர்வாகம் புதிய அப்டேட்..!

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம்..!   சி.எம்.ஆர்.எல் நிர்வாகம் புதிய அப்டேட்..!
Published on
Updated on
1 min read

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90 சதவீதம் நிறைவு: 

ஜூலை மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும் என  சி.எம்.ஆர்.எல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னையில் 2 ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில்  மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி,  மதுரையில்  திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ. தொலைவுக்கு சுமார் 8500 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை அண்மையில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

 இதனைத்தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 

அதேபோல, கோவை மெட்ரோ ரயில் திட்டம்139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது.முதல்கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டப் பணிகளுக்கு ரூ.9,424 கோடிசெலவாகும்.

இந்நிலையில், கோவை மற்றும்  மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த மாதம் அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com