போட்டிக்கு நீங்க ரெடியா? மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 56 வகை உணவுத் தட்டு..!

போட்டிக்கு நீங்க ரெடியா? மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 56 வகை உணவுத் தட்டு..!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உணவகம் ஒன்று சிறப்பு உணவு தட்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு பரிசும் அறிவித்துள்ளது.

மோடி பிறந்தநாள்:

செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் காந்தி ஜெயந்தி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழாவாக கொண்டாட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

56 வகை உணவு விருந்து:

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனியார் உணவகம் ஒன்று 56 வகை உணவு விருந்து தட்டை அறிமுகம் செய்யவுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் சைவ அல்லது அசைவ உணவு என ஏதாவது ஒரு தட்டை தேர்வு செய்யலாம்.

மேலும் படிக்க: நிம்மதியா குடிக்க கூட வழியில்லை, போதை ஏறவில்லை - ராஜேந்திர பாலாஜி..!

பரிசுத் தொகை:

தட்டு நிறைய உணவை எடுத்து 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவருக்கு 8,50,0000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதி பரிசு:

செப்டம்பர் 17 முதல் 26 வரை சிறப்பு உணவுத் தட்டை வாங்கி உண்ணும் ஒரு தம்பதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கேதார்நாத் செல்லும் பயணசீட்டும் வழங்கப்படும் என உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.