வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ...! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அசாம் மாநிலம் ஹோஜாய் மற்றும் கச்சார் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக சட்டமன்ற உறுப்பினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனா்.

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ...! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பருவமழைக்கு முந்தைய கனமழையால் அசாமில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒன்பது பேர் இறந்துள்ளனர் மற்றும் 6 புள்ளி 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  லும்டிங் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினா்  சிபு மிஸ்ரா, ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, கணுக்கால் அளவிலான நீரில் மீட்புப் பணியாளர் ஒருவரின் முதுகில் ஏறி படகிற்கு சென்றுள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதனால், பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.