சுயநினைவிழந்து ஓடும் ரயில் நடைமேடை இடைவெளியில் விழும் இளம்பெண்! இணையத்தில் வீடியோ வைரல்

சுயநினைவிழந்து ஓடும் ரயில் நடைமேடை இடைவெளியில் விழும் இளம்பெண்! இணையத்தில் வீடியோ வைரல்

அர்ஜென்டினாவில் பயணி ஒருவர்  ஓடும் ரயிலின் இடைவெளியில் மயங்கி விழும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பியூனஸ் அயர்ஸ் அருகே உள்ள இண்டிபென்டென்சியா ரயில் நிலையத்தில் நடைமேடையில் நின்ற இளம்பெண் ஒருவர், சுயநினைவிழந்து ஓடும் ரயிலை நோக்கிச் சென்று வண்டிக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் சரிந்து விழுந்தார்.

அருகில் இருந்தோர் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.