இப்படியும் பரதம் ஆடலாம்...சாதனை படைத்த கலைஞர்கள்...!

இப்படியும் பரதம் ஆடலாம்...சாதனை படைத்த கலைஞர்கள்...!

புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் உடுக்கை வாத்தியத்துடன் ஆனந்த தாண்டவம் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.


9 ஆம் நூற்றாண்டின் பாரம்பரிய இசைக்கருவியான உடுக்கையை இசைத்துக்கொண்டே பரத நாட்டியம் ஆடும் கலையை உலக அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் சங்கமம் குளோபல் அகாடமி சார்பில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி  கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முதலமைச்சர்  ரங்கசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

இதையும் படிக்க : தொடரும் கலவரம்...பெட்ரோலுக்கு வந்த நெருக்கடி...காத்திருக்கும் மக்கள்!

இதில் மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழகம், தெலங்கானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்களும் கலந்துக்கொண்டு உடுக்கையை இசைத்துக்கொண்டே தொடந்து 8 நிமிடம் நடனமாடி புதிய உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை யுனிக் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.