அபுதாபியில் நடந்தது என்ன?  

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவும், தற்போதைய இளம் வீரரான  ஷாகீன் அப்ரிடியும் மோதிகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அபுதாபியில் நடந்தது என்ன?   

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவும், தற்போதைய இளம் வீரரான  ஷாகீன் அப்ரிடியும் மோதிகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் நடைபெறவிருந்த டி-20 சூப்பர் லீக் போட்டிகள் கொரோனா காரணமாக அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில், லாகூர் கலந்தர்ஸ் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. இந்த போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது 19வது ஓவரில் ஆடிக்கொண்டிருந்த போது, பவுன்சர் ஒன்றை ஷாகீன் அப்ரிடி வீசினார். இதில் அந்த பந்து சர்ஃபராஸ் அகமதுவின் ஹெல்மெட்டில் வேகமாக மோதிவிட்டு சென்றது. அப்போது ரன் எடுப்பதற்காக எதிரே வந்த சர்ஃபராஸ் அகமது, பவுன்சர் வீசிய அப்ரிடியை நோக்கி ஏதோ பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்ரிடி, முன்னாள் கேப்டன் எனவும், ஒரு சீனியர் எனவும் பாராமல் சர்ஃபராஸ் அகமதுவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்த வீரர்களும், நடுவர்களும் இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். எனினும் இந்த சண்டையால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.