அகமதாபாத்: நவராத்திரி விழாவில் நடந்த சோகம்.. நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு..!

மருத்துவர்களின் பரிசோதனையில் இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது..!

அகமதாபாத்: நவராத்திரி விழாவில் நடந்த சோகம்.. நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு..!

நவராத்திரி விழா:

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி வட மாநிலங்களில் மிகவும் உற்சாகமாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் நடைபெறும் விழாவில் வீடுகள் மற்றும் கோயில்களில் கொலுக்கள் வைத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

இளைஞரின் அதிர்ச்சி மரணம்:

அந்த வகையில், அகமதாபாத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் சூழ்ந்து பாரம்பரிய கார்பா நடனம் ஆடினர். அப்போது, நடனம் ஆடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

வீடியோ வைரல்:

அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.