வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட மோதல்...!!!

வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட மோதல்...!!!

செங்கல்பட்டு மாவட்டம்  தாம்பரம் அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் பரவி வருகிறது. 

தாம்பரம் அடுத்த  பீர்க்கன் காரனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சதானந்தபுரம் வினாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமார்.  இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று  மாலை 5 மணியளவில் செந்தில் குமார் தனது வீட்டு அருகில் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது வீட்டின் அருகில் குடியிருக்கும் கணேஷ் மூர்த்தி ஆட்டோவை உடணே எடுக்குமாறு செந்தில் குமாரிடம் கோபமாக கூறி உள்ளார்.  செந்தில்குமார் சாப்பிட்டு வந்து ஆட்டோவை எடுப்பதாக கூறியதால் இருவருக்கும் வாய்தாகராறு ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது  வாய்தாகாறு ஏற்படவே அங்கு இருந்த பில்டர்  சக்தி என்பவர் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்த போது ஆட்டோ ஓட்டுநரின்  மனைவி செல்போனை கீழே தட்டி விட்டதால் ,உடனே சக்தி செல்போனை பிடுங்கிய பெண்ணை கன்னத்தில் ஓங்கி அடிக்கவே இருதரப்பினருக்கும் இடையை கடும் வாக்குவாதம் ஏற்பட்டு  மாறி மாறி தாக்கி கொண்டனர்.

தற்போது இரு தரப்பினரும் தாக்கி கொண்ட சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது.   இது சம்பந்தமாக பீர்க்கண்காரணை காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் செந்தில் குமார் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிக்க:  மணக்கோலத்தில் வந்த மணமக்கள்... சர்ப்ரைஸ் அளித்த கலெக்டர்!!