சபைக்குள் பெண் உறுப்பினர் அருகில் ஆபாச படம் பார்த்த எம்பியால் சர்ச்சை!!

சபைக்குள் பெண் உறுப்பினர் அருகில் ஆபாச படம் பார்த்த எம்பியால் சர்ச்சை!!

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் அருகில் இருக்கும்போதே ஆபாச படம் பார்த்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி Neil Parish செயலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அவரது  புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில், அவரது மனைவி சூசன் பாரிஷ், நடந்த சம்பவம் மிகவும் சங்கடமாக உள்ளது என்றும், கடந்த 40 ஆண்டுகளில் தமது கணவர் இதுபோன்ற செயல்களைச் செய்திருப்பதாக முற்றிலும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் பாரிஷ் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், உண்மை என்ன என்பது கடவுளுக்கு தெரியும் என மட்டும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை முடியும் மட்டும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.