மதநல்லிணக்கத்தை இப்படியும் காட்டலாமா....காட்டிட்டாரே இந்த கலைஞர்..!

உடுமலை அலங்கார கலைஞரின் முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்...!

மதநல்லிணக்கத்தை இப்படியும் காட்டலாமா....காட்டிட்டாரே இந்த கலைஞர்..!

நாட்டின் 76 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பலரும் புதிதாக சில விஷயங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதாவது அண்டர் வாட்டரில் தேசியக்கொடியை பறக்க விடுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். ஆனால் திரூப்பூர் உடுமலையில் அலங்கார கலைஞர் ஒருவர் வித்தியாசமான ஒரு முறையை கையில் எடுத்துள்ளார் வாங்க பாக்கலாம்....

யார் இந்த ஹக்கீம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் விசேஷங்களுக்கு எல்லாம் அலங்கார வேலைகளை செய்து தருபவர். இவர் தனது வேலைகளை தத்ரூபமாக செய்யும் திறன் கொண்டவர்.

சுதந்திர தினவிழா ஸ்பெஷல்:

நாட்டின் 76 வது சுதந்திர தின விழாவை இந்திய மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி வரும் வேலையில், தனது வேலைகளை சிறப்பாகவும் அழகாகவும் செய்யும் ஹக்கீம்,  சுதந்திர தினவிழா ஸ்பெஷலாக, யானையில் அமர்ந்து மூவர்ண கொடியை அசைக்கும் வகையிலான பொம்மைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

மூவர்ண கொடியை அசைக்கும் பொம்மைகள்:

76 வது இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையிலும், சாதி மத வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒற்றுமையுடன் தேச வளர்ச்சிக்கு உழைக்கவேண்டுமென்பதை வலியுறுத்தியும்  உருவாக்கப்பட்ட ஹக்கீமின் படைப்பானது, “ நகரும் யானை பொம்மையின் மேல் மும்மத பொம்மைகளும் அமர்ந்து தேசபக்தி பாடல் ஒலிக்க அந்த மூன்று பொம்மைகளும் தேசிய கொடியை பிடித்தவாறு அசைக்கும்  படியான ஒரு தத்ரூப செயலை மிக அழகாக காட்சிப்படுத்திருக்கிறார் அந்த திறமையான கலைஞர். அதோடுமட்டுமில்லாமல், வடிவமைக்கப்பட்ட அந்த பொம்மைகளை தனது தொழிற்கூடத்தின் முன்பு பார்வைக்காக நிறுத்தி வைத்திருக்கிறார்.

கலைஞர் ஹக்கீம்:

அலங்கார கலைஞர் ஹக்கீம் இந்த  தத்ரூப வடிவமைப்பு குறித்து பேசிய போது,  75 வது சுதந்திர திருநாளில் ஒற்றுமையை வலியுறுத்தியும், அனைவரையும் சந்தோசபடுத்தும் விதமாகவும், சுதந்திரத்திற்காக உழைத்தவர்களை நினைத்திட வேண்டும் என்பதற்காகவே இதனை வடிவமைத்ததாக கூறியுள்ளார்.

மக்கள் ஆரவாரம்:

கலைஞர் ஹக்கீமின் தத்ரூபமான இந்த செயலை கண்டு அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியதோடு, அந்த மூவர்ண கொடியை அசைக்கும் பொம்மைகளை கண்டு ரசித்தனர். இதனையடுத்து, அப்பகுதிமக்கள் இது குறித்த புகைப்படங்களை வெகுவாக  வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

பாராட்டுக்கள்:

76 வது இந்திய சுதந்திர தினத்தை ஒவ்வொரு வரும் சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில்,  நகரும் யானையில் மூவர்ண கொடியை உயர்த்தி பிடிக்கும் அசையும் பொம்மைகளின் தத்ரூப வடிவமைப்பு முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.